
காஸா பள்ளத்தாக்கில் நேற்றுமுன்தினம் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 404 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 562 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் மூலம் இரண்டு மாதங்கள் நீடித்த யுத்த நிறுத்தத்தை இஸ்ரேல் மீறியுள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.





