
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வந்துள்ள கூற்றுக்கள் தொடர்பாக மிக ஆழமாக ஆராய்ந்து, அவற்றை பரிசீலித்ததன் பின்னர் தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு சபாநாயகர் என்ற வகையில் எனக்களிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இடம்பெறும் பாராளுமன்ற அமர்வுகளின்போது அவரின் எந்தவொரு கூற்றையும் செவிப்புல, கட்புல மற்றும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒலி, ஒளிபரப்புச் செய்வதை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்டளையிடுகிறேன் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.





