வடக்கில் வேட்புமனுக்கள் நிராகரிப்பட்ட தரப்புக்களின் விவரங்கள்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மதியம் முடிவடைந்ததை அடுத்து வேட்புமனுக்களை சரி பார்க்கும் பணி மாவட்ட தேர்தல் செயலகங்களில் நடைபெற்று வருகின்றது.

அதன்படி சில தரப்புக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் இடங்கள் மற்றும் தரப்புக்களின் விவரம் தொடர்பாக முற்கூட்டி கிடைத்த தகவல்கள் வருமாறு:-

கிளிநொச்சி மாவட்டம்

* கரைச்சி பிரதேச சபையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜீவாராஜா தலைமையிலான சுயேட்சைக் குழு உட்பட 3 சுயேட்சைக் குழுக்கள்.

* பச்சிலைப்பள்ளியில் ஒரு சுயேட்சை குழு

மன்னார் மாவட்டம்

* மாந்தை மேற்கு பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி, காதர் மஸ்தானின் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் ஒரு கட்சியும் ஒரு சுயேச்சைக் குழுவும்

* முசலி பிரதேச சபையில் ஒரு முஸ்லிம் கட்சி.

* மன்னார் நகர சபையில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.

முல்லைத்தீவு மாவட்டம்

* கரைத்துறைபற்று பிரதேச சபையில் இரண்டு சிங்கள கட்சிகள்.

* புதுகுடியிருப்பு பிரதேச சபையில் இரண்டு சுயேச்சைக் குழுக்கள்

யாழ்ப்பாணம் மாவட்டம்

* மருத்துவர் அர்ச்சனாவின் சுயேட்சைக் குழு யாழ். மாநகர சபை, வடமராட்சி தென்மேற்கு (கரவெட்டி) பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகர சபை.

* வலிகாமம் தெற்கு (சுன்னாகம்) பிரதேச சபைக்கு ஒரே நபர் வேட்பாளராக இரண்டு கட்சிகளில் – ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி 

வவுனியா மாவட்டம்

* வவுனியா தெற்கு பிரதேச சபையில் ஜனநாயகத் தேசியக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஒரு சுயேட்சைக் குழு

* வவுனியா மாநகர சபையில் ஒரு சிங்களக் கட்சி.

* வவுனியா வடக்கு பிரதேச சபையில் இரண்டு சுயேட்சைக் குழுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *