கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், முஸ்லிம் கலாசார திணைக்களம், கிண்ணியா பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்றையதினம்(20) இப்தார் நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இவ் இப்தார் நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி தலைமையில் நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாண பண்பாட்டு உள்ளவர்கள் திணைக்கள பணிப்பாளர், சர்வ மத தலைவர்கள்,அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.












