யாழ்ப்பாணத்தில் பெருமளவான கேரள கஞ்சா இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது
யாழ்ப்பாணம் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவ புலனாய்வு பிரிவினரும் பருத்தித்துறை பொலிஸாசாரும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
24 பொதிகளில் 350 கிலோ எடையுடைய கேரளா மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட கஞ்சாவின் மொத்த பெறுமதி 60 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸாசார் மேற்கொண்டு வருகின்றனர்.





