மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை: உக்ரைன் தகவல்

உக்ரைன், மார்ச் 06

ரஷ்யா – உக்ரைன் இடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை வரும் திங்கட்கிழமை நடைபெறும் என உக்ரைன் அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியானது.

ரஷ்யா – உக்ரைன் உடனான போரை கை விட்டு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று ஐ.நா.பொது சபை உறுப்பு நாடுகள் வலியறுத்தி உள்ளன.

உக்ரைன் எல்லையில் இருக்கும் பெலாரஸில் இரு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையில், முற்றுகையிடப்பட்ட நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற, பாதுகாப்பான வழித்தடங்களை உருவாக்குவது மற்றும் அவை உருவாக்கப்படும் பகுதிகளில் உள்ளூர் போர் நிறுத்தங்களைக் கடைபிடிப்பது குறித்து ரஷ்யாவும் உக்ரைனும் தற்காலிக உடன்பாட்டை எட்டின. 

Leave a Reply