இலங்கைக்கு கடத்த முயன்ற ஏலக்காய் மூடைகள் தூத்துக்குடியில் பறிமுதல்!

இந்தியா – தமிழ்நாடு – தூத்துக்குடி மாவட்டம் விவேகானந்தன் காலனி கடற்கரையில் இருந்து நேற்று மாலை இலங்கைக்கு கடத்த இருந்த 4 கோடி ரூபா மதிப்புள்ள ஏலக்காய் கியூ பிரிவு பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டுப் படகில் 14 மூடை ஏலக்காய் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கியூ பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று மாலை பொலிசாரால் இவ் ஏலக்காய் மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகை பொலிஸார் கைப்பற்றியபோது படகில் எவரும் இருக்கவில்லை.

இதேநேரம் படகின் இலக்கம் மூலம் படகு உரிமையாளர் உள்ளிட்டவர்களை பொலிசார் தேடிவருகின்றனர்.

Leave a Reply