கந்தளாய் நகரில் தீப்பந்த போராட்டம்!

எரிபொருளுக்கான தட்டுப்பாடு, மின்சார தடை என்பவற்றைக் கண்டித்தும் இதற்கான தீர்வினை அரசாங்கம் பெற்றுத்தருமாறு வழியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்றிரவு கந்தளாய் நகரில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதில் மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர உள்ளிட்ட கட்சியின் முக்கியஷ்தர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

Leave a Reply