இரண்டரை மணிநேரம் இன்றும் மின்வெட்டு அமுல்: வெளியானது புதிய அறிவிப்பு

நாட்டின் சில பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டரை மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கமைய ஏ.பி. மற்றும் சி. வலயங்களில் மாத்திரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

வார இறுதி என்பதால் மாலை வேளையில் 1,550 மொகா வொட் மின்சார தேவையும் இரவு 2, 350 மொகாவொட் மின்சாரத்தின் தேவையும் உள்ளது என மின்சார சபை அறிவித்துள்ளது.
 
ஆகவே தற்போதைய நிலையில் மிகவும் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மக்களிடம் கோரியுள்ளது.

Leave a Reply