இலங்கைக்கு கடத்த முயன்ற 450 கிலோ கஞ்சா மீட்பு!

இந்தியா – தூத்துக்குடி, தாளமுத்து நகர் வெள்ளப்பட்டி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தி செல்ல முயன்ற சுமார் 450 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கடத்தும் நோக்கில் வாகனத்தில் எடுத்து கொண்டு சென்ற சமயமே பொலிஸார் குறித்த கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாடா ஏசி வாகனம் ஒன்றும், மூன்று மோட்டார் சைக்கிள்கள், 9 கைத் தொலைபேசிகள் உள்ளிட்டவைகளை தமிழ்நாடு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply