
சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவினால் கடந்த வருடம் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ் இதுவரை பல மில்லியன் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த டி.ஐ.ஜி சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பணமோசடி சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்த சுமார் 1,100 பேர் தொடர்பில் கடந்த 07 மாதங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது கிட்டத்தட்ட 780 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
இது தவிர இதேவேளை, சுமார் 325 போதைப்பொருள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் இந்தப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
போதைப்பொருள் கடத்தல், மதுபானக் கடத்தல், ஆயுதக் கடத்தல், மனிதக் கடத்தல் உள்ளிட்ட 18 சட்ட விரோதச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒரு நபரின் சட்டவிரோத நடவடிக்கைக்கு சட்டத்தை அமுல்படுத்துவதுடன், அந்த சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் சம்பாதித்த சொத்துக்கள் குறித்து தனி விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் இந்த விசாரணைகளின் போது 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.





