மே மாதம் புதிய ஜனாதிபதி – பரபரப்பு தகவலை வெளியிட்ட முக்கிய நபர்

நாட்டில் தற்போது அரசாங்கம் என்ற ஒன்று கிடை யாது . ராஜபக்ஷ குடும்பம் மாத்திரமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இவர்களால் ஏப்ரல் அல்லது மே மாதம் வரை மாத்திரமே பயணிக்க முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்

ராஜபக்ஷ அரசாங்கம் செயற்பாட்டு ரீதியில் கவிழ்வது நிச்சயம் என்று ஆளுங் கட்சி பாராளுமன்ற ஆளுந்தரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் சுயாதீனமாக செயற்படுகின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட் சியும் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்தால் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்க நேரிடும். தொடர்ந்தும் தனியொருவருக்கு அதிகாரங்களை வழங்க மக்கள் தயாராக இல்லை.

ஆளுமை மிக்க பாரிய அரசியல் சக்தியொன்று உருவாகின்றது . அதுகுறித்து பின்னர் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என்றும் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார் . மக்கள் எதிர்பார்ப்பது அரசியல் தொடர்பில் சிறந்த அனுபவமுடைய, கல்வி அறிவுடைய, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய குழுவையே ஆகும் .

தனி நபரொரு வருக்கு அதிகாரத்தை வழங்குவற்கு மக்கள் தற்போது தயாராக இல்லை. அவ்வாறான குழு நாட்டில் இருக்கிறது . அக்குழு உருவாகிக் கொண்டிருக்கிறது. எனினும் அக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் யார் என்பதை என்னால் தற்போது கூற முடியாது.

அதனை எதிர்வரும் காலங்களில் வெளிப்படுத்துவோம். ராஜபக்ஷ குடும்பம் நாட்டை முற்றாக சீரழித்து இந்நிலைமைக்கு கொண்டு வரும் என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந் ததன் காரணமாகவே இந்த அரசாங்கத்தில் எவ்வித அமைச்சுப் பதவிகளையும் ஏற்காது பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற் பட்டு வருகிறேன் .

ஒரு குடும்பத்தால் முழு நாடும் பாரிய பாதிப்புக்குள்ளாகப்போகிறது என்பது ஜனாதிபதி பதவியேற்ற அன்றைய தினமே தெளிவாக தெரிந்தது. நாம் எண்ணி யதை விட நாடு தற்போது பாரிய வீழ்ச்சிய டைந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply