கோட்டா அரசிலிருந்து வெளியேறும் 16 எம்பிக்கள் – அரசுக்கு பெரும் தலையிடி

ஆளும் கூட்டணியை அமைக்கும் 10 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த வாரம் முதல், அவையில் சுயேச்சையாக அமரத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10 கட்சிகளின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது சுயேச்சையாக அமருவது என்ற தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிய வருகிறது.

இதன்படி, 16 பேர் கொண்ட குழு, அரசாங்க எம்.பி.க்களில் இருந்து தனித்தனியாக அமரும், ஆனால் அவையில் அரசு தரப்பில் இருக்கும்.

கடந்த ஒரு வருடமாக அதிருப்திக் குரல் எழுப்பி வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இந்த நடவடிக்கையில் இணையப் போவதில்லை என்றும் தெரியவருகிறது.

அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்து அழைப்பு விடுத்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகிய இரண்டு முக்கிய அமைச்சரவை அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி நீக்கம் செய்ததை அடுத்து, கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply