<!–
வியர்வைதுளிகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு இன்று ( ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது .
“பெண் தொழிலாளர்களைப் பாதுகாத்திடுங்கள் ” எனும் தொணிப்பொருளில் இவ்வருட பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதன்போது குறிதத் விடயத்தை விலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட பெண்கள் கவனயீர்ப்பு ஊர்வலமாக பாரதி ஸ்ரார் தனியார் மண்டபம் வரை சென்றனர்.
மேலும் தனியார் மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில், நாடளாவிய ரீதியில் உள்ள பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






