புத்தளம் 4 ஆம் கட்டைப் பகுதியிலிருந்து புத்தளம் பகுதிக்கு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கு மரக்கட்டைகளை கொண்டு சென்ற கப்ரக வாகனத்தை பொலிஸார் சுற்றிவளைதுள்ளனர்.
புத்தளம் பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய இன்று காலை சீமாவெளி பகுதியில் வைத்து சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது புத்தளம் பகுதியைச் சேர்த ஒருவரும் மக்கள்புரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 46 தேக்கு மரக்கட்டைகள், மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற கப்ரக வாகனம் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், மரக்கட்டைகள், மற்றும் மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற கெப்ரக வாகனம் ஆகியவற்றை நாளை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வரிகின்றனர்.






