தாக்குதலை கண்டிக்கின்றோம் – மீனவ ஒத்துழைப்பு இயக்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி.தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினராகிய அ.ஜோன் ஜிப்றிக்கோ ஜோன் தமிழ் மீதும் அவரது சகோதரி மீதும் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிகின்றோம் என யாழ் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக உடனடியாக பொலிசார்மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை எடுத்து எவர் மீது பிழையோ அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தம்பி ஜோன் ஜிப்றிக்கோ பிழை என்றால் அவர்மீது நடவடிக்கை எடுக்கட்டும் எந்த ஒரு குற்றவாளியும் நீதிமன்றாத்தால் குற்றவாளியாக. இனம் கண்டு தண்டனைவழங்கும்வரை அவர் குற்றவாளியில்லை.

எது எப்படியிருந்தாலும் அவர்களுக்கு அடித்து அவரும் அவரது சகோதரியும் பொலிஸ் நிலையத்திலிருந்து அன்புலன்ஸ் வண்டியில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகா செய்திகள் வருகின்றது.

அந்தளவுக்கு ஒருவருக்கு அடிப்பதற்க்கு பொலிசாருக்கு அதிகாரம் யார்கொடுத்தது இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அதிகாரிகள் ஆவனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply