கொரோனா காலத்தில் மருத்துவ உதவி செய்த உக்ரைன் விமானம் முற்றாகத் தகர்ப்பு

ரஷிய படைகளால் தகர்க்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானத்தின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது 10 ஆவது நாளாக ரஷ்யா தனது தொடர் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது, அதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானம் ‘அண்டனோவ் 225 மிரியா’ கடந்த 28ஆம் திகதி ரஷ்ய படைகளின் தாக்குதலால் தகர்க்கப்பட்டது.

6 எஞ்சின்களையும், 314 தொன் எடையும் கொண்ட இந்த சரக்கு விமானம் கொரோனா பரவல் காலத்தில் உலகம் முழுவதும் மருத்துவப் பொருட்களை கொண்டு செல்ல பேருதவி செய்தது.

குறித்த சரக்கு விமானம் ரஷிய தாக்குதலில் தற்போது பெருமளவு தகர்க்கப்பட்டுள்ளது. விமானத்தை சீரமைக்க 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவுக்கு செலவு ஏற்படலாம் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

உலகின் அதிசயங்களில் ஒன்றாக மக்களால் வியந்து பார்க்கப்பட்ட இந்த விமானத்தின் தற்போதைய சிதைந்த நிலை குறித்து மக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply