உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை 3 மாதங்களுக்குள் வெளியிட எதிர்பார்ப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply