புதிய சுகாதார வழிகாட்டலுக்கு அமைய கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி ஏழு நாட்களுக்குப் பின்னர் மரணிப்பவர்களின் மரணம், கொரோனா மரணமாகக் கருதப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த மரணங்களின் இறுதிக் கிரியைகளைத் தனிமைப்படுத்தல் விதிகளில் இன்றி சாதாரண முறையில் மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனாத் தொற்றால் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்யும் நடவடிக்கையை அரசாங்கத்தினூடாக மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.





