ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரின் பக்க அம்சமாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஈரான் உள்ளிட்டவற்றின் நிரந்தர பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி பத்ஷேபா நெல் க்ரோக்கர், பிரிட்டன் நிரந்தர பிரதிநிதி சைமன் மேன்லி, ஈரானின் நிரந்தர பிரதிநிதி இஸ்மாயில் பிகே ஹமானே மற்றும் ஈரான் நீதித்துறையின் பிரதித் தலைவர் கலாநிதி கசென் கரிபாபாடி ஆகியோரை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடினார்.
நீதி அமைச்சர் அலி சப்ரி, மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் நெரின் புள்ளே மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே உள்ளிட்டோரும் குறித்த சந்திப்புக்களில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






