ஐ.நா அமர்வில் இலங்கை அரசு தொடர்பில் கடுமையான விமர்சனம்! எம்.கெ.சிவாஜிலிங்கம்

இம்முறை ஐ. நா அமர்வில், உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்கிறோம் என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கெ.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினுடைய,49 ஆவது கூட்டத் தொடரிலே,46 இன் கீழ் ஒன்று என்று எடுக்கப்கப்பட்ட தீர்மானத்திலே,வாய் மொழி மூலமான அறிக்கையை உயர் ஸ்தானிகர் சமர்ப்பித்திருந்தார்.அது ஒரு காட்டமான அறிக்கையாக அது அமைந்துள்ளது.

அதிலே அவர், பொறுப்புக்கூறலை இலங்கை அரசு தவிர்த்து விட்டது என்பதை ஆணித்தனமாக கூறியிருந்தார். சர்வதேச நீதி மன்றம் வரை செல்ல முடியும் என்பதை முன்னர் இருந்தே அவர் வலியுறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், இலங்கை அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருப்பது வரவேற்க தக்கது.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை பதவியில் அமர்த்துவது உள்ளிட்ட செயற்பாடுகளால், இங்கையில் நல்லிணக்கம் ஏற்படாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர காணாமல் ஆக்கப் பட்டோருக்கான அலுவலகம் முக்கிய விடயங்களில் இருந்து தவறி விட்டது போன்ற விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும், இது போன்ற இனப்படுகொலை மீள நிகழாமை போன்ற விடயங்கள் உறுதிப்படுத்தப் பட வேண்டும். இவை ஐநாவுக்கு வெளியேயும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும், உயர்ஸ்தானிகரின் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply