
நாட்டில் நாளை மின்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளைய தினம் P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய வலயங்களில் 2 மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இவ்வாறு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், நாளைய தினம் குறித்த வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளைய தினம் E மற்றும் F ஆகிய வலயங்களில் காலை 8.00 முதல் மாலை 6.00 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 5 மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், நாளைய தினம் E மற்றும் F ஆகிய வலயங்களில் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது





