சாவகச்சேரியில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் இளைஞன் கைது

சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையப் பகுதியில் போதைப் பொருள் விற்பனையில் ஒருவர் ஈடுபடுவதாக 52ஆவது படைப்பிரிவின் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது சாவகச்சேரி மடத்தடிப் பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை சாவகச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply