திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரமோற்சவம்

திருகோணமலை – ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரமோற்சவம் நாளை மறுதினம் 08.03.2022 இருந்து 19.03.2022 திகதி வரையிலும் இடம்பெறவுள்ளது.

தெட்ஷணகைலாசம் என்னும் திருக்கோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரமோற்சவம் ஸ்வஸ்தி ஸ்ரீ நிகழும் மங்களகரமான பிலவ வருடம் மாசி மாதம் 24ம் நாள் (08.03.2022) செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு துவஜாரோகணம் எனும் கொடியேற்றம் நிகழத் திருவருள் கூடியுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருவிழா இடம்பெற்று 10ம் நாள் 17.03.2022 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு இரதோற்சவத் திருவிழாவும், 18.03.2022 வெள்ளிக்கிழமை உதயத்தில் தீர்த்தோற்ஸவமும் இடம்பெற்று இரவு துவஜ அவரோகணம் எனும் கொடியிறக்கம் இடம்பெறும்.

மறுநாள் 19.03.2022 அன்று சனிக்கிழமை பூங்காவனத்திருவிழாவும் இடம்பெறும். மஹோற்சவ காலங்களில் தினமும் காலை 5.30 மணிக்கு அபிஷேகம், காலை 7.00 மணிக்கு மூலஸ்தான பூஜை, 7.45 க்கு தம்ப பூஜை, 8.30 மணிக்கு வசந்த மண்டப பூஜை, பிற்பகல் 2.30 மணிக்கு அபிஷேகம், 3.30 மணிக்கு மூலஸ்தான பூஜை, மாலை 4.15 க்கு தம்ப பூஜை, மாலை 5.00 மணிக்கு வசந்த மண்டப பூஜை இடம்பெற்று 6.00 மணிக்கு அம்பாள் வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள் பாலிப்பாள்.

08.03.2022 – 1ம் திருவிழா – காராம்பசு வாகனம்
09.03.2022 – 2ம் திருவிழா – மகர வாகனம்
10.03.2022 – 3ம் திருவிழா – சர்ப்ப வாகனம்
11.03.2022 – 4ம் திருவிழா – அன்ன வாகனம்
12.03.2022 – 5ம் திருவிழா – மஞ்சம்
13.03.2022 – 6ம் திருவிழா – கைலாச வாகனம்
14.03.2022 – 7ம் திருவிழா – புராதன சிம்ம வாகனம்
15.03.2022 – 8ம் திருவிழா – குதிரை வாகனம் (வேட்டைத் திருவிழா)
16.03.2022 – 9ம் திருவிழா – சப்பறம்
17.03.2022 – இரதோற்சவம்
18.03.2022 – தீர்த்தோற்சவம்
19.03.2022 – பூங்காவனத் திருவிழா

Leave a Reply