
அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரஇ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படிஇ அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு மேற்கண்டவாறு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்இ அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நீதி கிடைக்கும் வரை தமது அமைச்சுப் பணிகளில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட போதும்இ அவர்களுக்கான பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படுமென அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படிஇ பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்படவிலைஎன பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளைஇ விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நீதி கிடைக்கும்வரை அமைச்சுப் பணிகளில் இருந்து விலகிச் செயற்படவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





