
தனது காதலை தடுக்க முயன்ற தாயின் தலையில் சுத்தியலால் தாக்கிய மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
தனது 17 வயதான மகள் காதல் வயப்பட்டதை அடுத்து அதனை நிறுத்துமாறு தாய் தெரிவித்துள்ளார்.
எனினும் தாயின் அறிவுரையை கேட்க மறுத்த மகள் தாயின் தலையில் சுத்தியலை கொண்டு தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த தாய் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான மகளை தமது பொறுப்பில் எடுத்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





