
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரை பகுதியில் நேற்று இரவு வீசிய கடும் காற்றால் இரு மீனவர்கள் காயமடந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று மாலை கடல் தொழிலுக்கு சென்ற குறித்த மீனவர்களின் படகு, வீசிய பலத்த காற்று காரணமாக கவிழ்ந்துள்ளது.
இதனால் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் மற்றைய மீனவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.





