13 ஆவது திருத்தம் மாகாணசபை தேர்தலை உடன் அமுல்படுத்த இந்தியா அழுத்தம்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாகவும்,மாகாணசபைத் தேர்தலை விரைவாகவும் நடத்துமாறு  ஐ,நா,மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கைய வற்புறுத்தியுள்ளது இந்தியா.ஜெனிவாவின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி இந்திரமணிபாண்டே இதனை வலியுறுத்தினார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது; இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது குறித்து ஐ,நா ஆணையாளரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை மிகவும் அவதானத்துக்குரியது என இந்தியா கருதுகிறது. அனைவரதும் அடிப்படை உரிமை மற்றும் மனித உரிமைகள் பேணப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுத்தல், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்கல் இன்னும் தமிழர்களின் சட்ட ரீதியான அபிலாஷைகளை கவனத்திற் கொண்டு திருப்திகரமான அதிகாரப்பகிர்வை வழங்க வேண்டுமென இலங்கையை இம்மாநாட்டில் இந்தியா வற்புறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply