முச்சக்கரவண்டி சாரதியை அடித்துக் கொன்ற நபர்!

அம்பலாங்கொட – கந்தேகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த 5ஆம் திகதி இரவு முச்சக்கர வண்டியொன்றில் வாடகை பயணம் சென்று உறவினர் வீட்டில் முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு மீண்டும் வீடு திரும்ப முயன்றுள்ளார்.

இதன் போது கந்தேகொட புகையிரத கடவைக்கு அருகில் வைத்து குறித்த நபரை தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கந்தேகொட பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த 46 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply