மூன்று முறை கொலை முயற்சியில் இருந்து தப்பிய உக்ரைன் ஜனாதிபதி

உக்ரைன், மார்ச் 07

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் இன்று 12-வது நாளாக நீடிக்கிறது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.

உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷ்யா வசம் சென்றுள்ளது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல 3 முறை முயற்சி நடந்ததாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் அதிபரை கொல்ல வாக்னர் குழு மற்றும் செச்சென் கிளர்ச்சியாளர்கள் என இரண்டு வெவ்வேறு கொலைக் குழுக்கள் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை அமைப்பு உக்ரைனை எச்சரித்ததாகவும் அதனால், உஷாரான உக்ரைன் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்றும் செய்தி வெளியாகி உள்ளது.

உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ கவுன்சில் செயலாளர் ஒலக்சி டனிலோவ் கூறுகையில்,

ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை அமைப்பு கொலை முயற்சி குறித்து தங்களுக்கு முன் கூட்டியே தகவல் கொடுத்ததாகவும், உக்ரைன் அதிபரை கொலை செய்ய வந்த படையினர் தலைநகர் கீவ் அருகே உள்ள புறநகர் பகுதியில் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் 3 முறை நடந்த கொலை முயற்சிகளில் உக்ரைன் அதிபர் தப்பியுள்ளார். உக்ரைனுடன் போரை விரும்பாத ரஷிய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை அமைப்பில் உள்ள சிலர் கொலை முயற்சி பற்றிய தகவலை உக்ரைனிடம் முன் கூட்டியே கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply