1500 மேற்பட்ட சிற்றூண்டிசாலைகள் பூட்டு

கொழும்பு, மார்ச் 07

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் தட்டுப்பாட்டுடன் எரிபொருள் தட்டுப்பாடும் பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்த நிலையில் பிரதான நகரங்களில் உள்ள 60 சதவீதமான சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த புறநகர்களில் மாத்திரம் சுமார் 1,500 சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக அரச வைத்தியசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளை இன்றைய தினம் முதல் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மின்சார பிரச்சினை காரணமாக குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட வேண்டிய உணவுகளிலும் பாதிப்பு ஏற்படுகின்றது.

இதனால் தமது தொழிற்துறையினர் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply