மாணவர்களின் சுகாதார நலனில் அதிகளவில் அக்கறை செலுத்துங்கள்! விசேட வைத்தியர் தீபால் பெரோரா

பாடசாலைகள் மீள திறக்கப்படும் நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக மாணவர்களின் சுகாதார நலன் தொடர்பில் அதிகளவில் அக்கறை செலுத்த வேண்டும் என சிறுவர் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரோரா வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடைந்து காணப்படுகின்றது.

எனினும், 12 வயதுக்கு குறைந்தோருக்கு தடுப்பூசி இதுவரை வழங்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு வைரஸ் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஆகவே அவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

ஏனையோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பேணுவது தொடர்பில் மாணவர்களுக்கு பெற்றோரும், ஆசிரியரும் உரிய ஆலோசனைகளை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்து செல்வதற்கு எரிபொருள் விநியோகிக்கும் போது, தமக்கு முன்னுரிமை வழங்குமாறு மாகாண பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply