யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளையில் சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக ஆழியவளை கிராமத்திற்குட்பட்ட மக்களுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டி இன்று ஆழியவளை அருநோதயா விளையாட்டு கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது
குறித்த விளையாட்டு போட்டியானது ஆழியவளை அருநோதயா விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 2: 30 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 6.30 மணியளவில் நிறைவு பெற்றது
இந்நிகழ்வில் பாரம்பரிய தமிழ் விளையாட்டுகளான கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், சாக்கோட்டம், மெல்ல நடை, மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் போன்ற விளையாட்டுக்கள் இடம்பெற்றன
குறித்த விளையாட்டுப் போட்டியில் கிராம மக்கள் இளைஞர்கள் பெரியோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்