
கொழும்பு, மார்ச் 7: கண்டி பெரஹரவில் புனித தந்த தாதுவை அதிக தடவைகள் சுமந்து சென்ற ‘நெதுன்கமுவ ராஜா’ என்ற யானை தனது 69 ஆவது வயதில் இன்று அதிகாலை 5.30 அளவில் மரணித்தது. இதனை, அதன் பராமரிப்பாளர் வைத்தியர் ஹர்ச தர்மவிஜய உறுதிப்படுத்தியுள்ளார்.
1953ஆம் ஆண்டு இந்தியாவின் – மணிப்பூரில் பிறந்த நெதுன்கமுவ ராஜா, 10 அடி உயரம் கொண்ட பெரிய யானையாகும்
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில், கண்டி – எசல பெரஹரவில் இந்த யானை புனித தந்த தாதுவை சுமந்து சென்றுள்ளது.





