
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை மாணவி ஒருவரின், தனிப்பட்ட புகைக்கப்படங்களை பயன்படுத்தி,அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 வயதுடைய குறித்த பாடசாலை மாணவி,நபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவருடன் நெருக்கமான இருந்த புகைப்படங்களை பரிமாறியதாவும் ,அதன் பின்னர் காதல் முறிவடைந்த நிலையில்,புகைப்படங்களை பயன்படுத்தி இளைஞர் பாலியல் ரீதியாக மிரட்டியதாகவும் தெரியவருகிறது.
மேலும் குறித்த இளைஞன்,மாணவின் புகைப்படங்களை தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட நிலையில்,நண்பர்களும் பாலியல் ரீதியான தொல்லைகளை ,மாணவிக்கு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் புங்குடுதீவு 4 ஆம்,6 ஆம் வட்டாரங்களைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.





