
கொழும்பு, மார்ச் 7: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 2021 G. C. E உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களை கொண்டு செல்வதில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
2021 G. C. E. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் (2022) நடைபெறவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.





