யாழில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை

யாழில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

கொடிகாமம் – மீசாலை வடக்கைச் சேர்ந்த வாகீசன் விதுசன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த 6 நாள்களாக காய்ச்சல் காரணமாக குழந்தைக்கு ஆயுர்வேத வைத்தியம் செய்தபின் நேற்று பிற்பகல் 5 மணிக்கு சாவச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

இதையடுத்து மேலதிக சிகிச்சைக்கு குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

எனினும் குழந்தை சிகிச்சை பயனின்றி நேற்று இரவு உயிரிழந்தான் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது

டெங்கு காய்ச்சல் காரணமாகவே குழந்தையின் இறப்பு இடம்பெற்றதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் இறப்பு விசாரணையை இன்று மேற்கொண்டார்.

இதேவேளை, காய்ச்சலினால் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெறுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply