தன்னை கைது செய்ய தயாராகி வருவதாக புலம்பும் ஹிருணிகா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வசித்து வரும் வீட்டிற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் தன்னை கைது செய்ய தயாராகி வருகின்றனரென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

அத்துடன், தான் உட்பட சிலரை குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் கைது செய்ய தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் கைது செய்யுமளவுக்கு தாம் உள்ளிட்டோர் எந்த குற்றத்தையும் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஹிருணிகா, ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply