5 லீற்றர் எண்ணெய்யை வைத்து கடலில் நூறு மீற்றர் தூரம் கூட செல்ல முடியாது – மீனவர்கள் கவலை

படகில் தொழிலுக்கு சென்று வர வேண்டும் என்றால் 40 லீற்றர் எண்ணெய் வேண்டும். இப்போது 5 லீற்றர் எண்ணெய் தான் தருகிறார்கள், நாம் என்ன செய்வது என யாழ் மாவட்ட கடல் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு கடல் தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த புதன்கிழமையிலிருந்து நாம் தொழிலுக்கு செல்லவில்லை. 40 லீற்றர் எண்ணெய் எமக்கு வேண்டும். ஆனால் 5 லீற்றர் எண்ணெய் தான் தருகிறார்கள். அதுவும் வரிசையில் நின்று பெற வேண்டும். இன்று எண்ணெய் கிடைத்தால் நாளை எண்ணெய் கிடைக்காது.

ஆகவே இன்று ஒரு பகுதியினர் தொழிலுக்கு செல்கின்றோம். நாளை இன்னுமொரு பகுதியினர் தொழிலுக்கு செல்வார்கள். இப்படி பல நாட்களுக்கு ஒருமுறை தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 5 பேர் சேர்ந்து எண்ணெய் வாங்கியே ஒரு நாளைக்கு தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று என்றனர்.

Leave a Reply