நாட்டில் இனி இந்த ஒழுங்கில் தான் எரிபொருள் விநியோகிக்கப்படும்!

நாட்டுக்குள் வருகை தந்துள்ள எண்ணெய் தாங்கிக் கப்பல்களிலிருந்து , எரிபொருள்களை விநியோகிப்பதற்கு , முக்கியத்துவமளிக்க வேண்டிய நிறுவனங்கள் உள்ளடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது .

இலங்கை போக்குவரத்துச் சபை , ரயில்வே திணைக்களம் , மின்சாரசபை , சுதந்திர வர்த்தக வலயம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது .

அதற்கமைவாக 8 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை மின்சார சபைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

வழமையாக இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு மூன்றரை லட்சம் மற்றும் நான்கு லட்சம் லீற்றருக்கு இடைப்பட்ட அளவு எரிபொருள் வழங்கப்பட்டுவந்தது . இம்முறை அதனை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது .

தனியார் பேருந்துகள் மற்றும் சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கும் எரிபொருளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

Leave a Reply