பயிருக்கு உரம் இல்லை – எஞ்சினுக்கு டீசல் இல்லை! – விவசாயிகள் கவலை

சுழற்சி முறையில் விவசாயிகளுக்கு மீள முடியாத பிரச்சினை உருவாகியுள்ளதாக யாழ் மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் பல்வேறு வகையான பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அதிலும் விவசாயிகளுக்கு தொடர்ச்சியான பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது. முதலில் உரப்பிரச்சினை. அதன் பின்னர் சில மரக்கறிகளை இறக்குமதி செய்ய மாட்டோம் என்று கூறினார்கள்.

எனினும் இங்கே அறுவடை செய்யும் நேரத்தில், பல மரக்கறிகளை இறக்குமதி செய்துள்ளனர். மின்சாரம் இல்லை என்று பயிர்களுக்கு, எஞ்சின் மூலம் நீர் பாய்ச்சுவோம் என்றால் எரிபொருள் இல்லை. மரக்கறிகளை தம்புள்ளைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் டீசல் இல்லை என்றனர்.

Leave a Reply