
இலங்கையின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலையான “LANWA Sansta Cement” இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிநவீன சீமெந்து உற்பத்தி நிலையம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு, உள்விவகார மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலை , ஆண்டுக்கு 4 மில்லியன் மெட்ரிக் உற்பத்தி எதிரிபார்க்கப்படுகிறது.
அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வு காண இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் தற்போது மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானத் துறைக்கு இந்த முயற்சியானது பொருளாதாரத்திற்கும் ஊக்கமளிக்கும் என்று முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.
ஆரம்ப விலையாக சீமெந்து பைக்கற் ஒன்று 1375 ரூபாய் என எதிர்பார்க்கப்படுகிறது.





