சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!

கொக்கல – மோதரகொட பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.

மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த இருவருக்கும் இடையில் சிறிது காலமாக, படகு தொடர்பான தகராறு ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர், இன்று அதிகாலை மதுபோதையில் பிரவேசித்து அவரது சகோதரர் மீது தாக்குதலை மேற்கொண்டதன் பின்னர் கொக்கல ஓயாவுக்குள் தள்ளியதாக குறிப்பிடப்படுகிறது.

இதனையடுத்து காயமடைந்த நபர், பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply