
கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயங்களில் உள்ள பல பாடசாலைகளில் அதிபர்கள் ஏழு வருடங்களைக் கடந்தும் இடமாற்றம் வழங்கப்படாது தொடர்ந்தும், கடமையாற்றி வருகின்றனர் எனப் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய அதிபர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, கல்வி சமூகத்தினரும் இது தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளில் அதிபர்கள் ஏழு வருடங்களைக் கடந்தும் தொடர்ந்தும் அதே பாடசாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை. வழமையான இடமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதனை விரைவாக மேற்கொள்ள மாகாண மற்றும் வலய கல்வி திணைக்களங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே இது தொடர்பில் கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கி. கமலராஜனை தொடர்பு கொண்டு வினவிய போது ஏழு வருடங்களைப் பூர்த்தி செய்த அதிபர்களின் இடமாற்றம் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் கவனத்திற்குத் தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.





