
உக்ரைன் போர்ப் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வெளியேறும் வகையில் 4 நகரங்களில் போர் நிறுத்தத்தை ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து அண்டைநாடுகளுக்கு மக்கள் வெளியேறினால் மட்டுமே, அவர்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பமுடியும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் மக்கள் வெளியேறும் வகையில் போரை நிறுத்தவேண்டும் என ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட ரஷ்யா இராணுவம் கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நான்கு நகரங்களில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.





