
டெங்கு காய்ச்சல் காரணமாக ஒரு வயதும் 5 மாதமும் நிரம்பிய குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
மீசாலை வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த வாகீசன் லிபிஷன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
தொடர்ந்து 5 நாள்களாக காய்ச்சல் இருந்ததாகவும் , ஆயுள்வேத மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், குழந்தை குணமடையாத நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் நேற்று பிற்பகல் சேர்க்கப்பட்டு உடனடியாகவே யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவே குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.





