
இன்றைய தினம் உயிரிழந்த ´நெந்துன்கமுவே ராஜா´என அழைக்கப்படும் யானை ஜனாதிபதியால் தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
யானையின் சடலத்தை எதிர்கால சந்ததியினரின் பார்வைக்காக பாதுகாக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கண்டி எசல பெரஹெராவின் புனித கலசத்தை அதிக முறை சுமந்து சென்ற ´நெந்துன்கமுவே ராஜா´ என அழைக்கப்படும் யானை இன்று காலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





