
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதின்ம வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில், சிறுமியின் தாயாரின் இரண்டாவது கணவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமி வெளிமாவட்டத்தில் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றார். விடுமுறையில் வீடு வந்துள்ளார்.
இதன்போது சிறுமியின் தாயாரின் இரண்டாவது கணவர் அவரைத் துஷ்பிரயோகித்தார் என்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.





