இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திக்க விரும்பும் வடக்கு கடல்தொழிலாளர்கள்

இலங்கை இந்திய மீன்பிடி பிரச்சினை தொடரும் நிலையில்,யாழில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தின், அதிகாரியை வடக்கு மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் இன்று மதியம் சந்தித்துள்ளனர்.

சந்திப்பு தொடர்பில் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:

இதன் பொது கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக முதலமைச்சருக்கு வழங்க வேண்டிய பகிரங்க ஊடக அறிக்கையை ஒன்றை தயார் செய்தோம்.

அந்த அறிக்கையை இந்திய துணைத் தூதர் ஊடக முதலமைச்சருக்கு அனுப்பி வைப்பதற்காக ஒப்படைந்துள்ளோம்.

மேலும் இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சரை வடக்கு மீனவ சமூகம் சந்திப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளோம்.

இப்போது தமிழகத்தில் மீனவ தடைக்கலாம் அமுலில் உள்ளது.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி என்றாலும் இழுமை மடி தொழிலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தையும் சமர்பித்துள்ளோம் .

இந்த கடிதங்களை கொழும்பில் உள்ள இந்திய தூதரத்துக்கு அனுப்பி சாதக பாதக நிலைகளை அறிந்து பதில் தருவோம் என யாழில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார் என்றனர்.

Leave a Reply