
போரின்போது கைவிடப்பட்ட வெடிபொருள்களை வெட்டிய மற்றும் அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கணவன் மற்றும் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு இரணைப்பாலைப் பகுதியில் வீடொன்றில் வெடிபொருள்கள் இருப்பதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அந்த வீட்டை அவர்கள் சோதனையிட்டுள்ளனர்.
போரின்போது கைவிடப்பட்ட வெடிபொருள்கள் மற்றும் அவை வெட்டி பிரிக்கப்பட்டிருந்த நிலையிலும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. வீட்டிலிருந்த மனைவியை பொலிஸார் கைது செய்தனர். கணவனை தேடிச் சென்று அரச புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மனைவி முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கணவனை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





